×

க்ராணி: விமர்சனம்

லண்டனில் இருந்து ஊர் திரும்பிய ஐடி கம்பெனி தம்பதி ஆனந்த் நாக், அபர்ணா, கிராமத்திலுள் பூர்வீக வீட்டில் மகன், மகளுடன் குடியேறுகின்றனர். அப்போது வயதான பெண்மணி வடிவுக்கரசி மயங்கி விழ, மனிதநேயத்துடன் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து உதவுகின்றனர். அவர்தான், பல வருடங்களுக்கு முன்பு அந்த வீட்டின் உரிமையாளராக இருந்த ஒரு மந்திரவாதியின் மனைவி. தனது இளமையை காப்பாற்றிக்கொள்ள மந்திரவாதி சில மர்ம வித்தைகளில் ஈடுபடுகிறார். அதன் தொடர்ச்சியாக வீட்டுக்குள் நுழைந்த வடிவுக்கரசி, அங்கிருந்த சிறுவனையும், சிறுமியையும் என்ன செய்கிறார் என்பது மீதி கதை.

அமானுஷ்ய சஸ்பென்ஸ் திரில்லரில் முதன்மை வேடத்தை சுமந்துள்ள வடிவுக்கரசிக்கு இது ஒரு மாறுபட்ட கதாபாத்திரம். சூனியக்காரியாக வந்து, தனது அனுபவ நடிப்பில் மிரட்டியிருக்கிறார். போலீசாராக திலீபன், சிங்கம்புலி நிறைவாக நடித்துள்ளனர். ஆனந்த் நாக், அபர்ணா மற்றும் அவர்களின் மகனும், மகளும் இயல்பாக நடித்துள்ளனர். கஜராஜின் சாதிய பாகுபாடு வெறுக்க வைக்கிறது. ஹாரர் படத்துக்கான ஒளிப்பதிவை ஏ.மணிகண்டனின் கேமரா சிறப்பாக வழங்கியுள்ளது. டாக்டர் செல்லையா பாண்டியனின் பின்னணி இசை, இதயத்தை நடுங்க வைக்கிறது. இயக்குனர் விஜயகுமாரனின் அதீத கற்பனை, 2ம் பாகம் தொடரும் என்று ஆபத்தில் முடிகிறது. பலவீமானவர்கள் பயப்படுவார்கள்.

Tags : Anand Nag ,Aparna ,London ,Vadikukarasi ,
× RELATED நான் எலெக்ட்ரானிக் இசைக்கு எதிரானவனா?...