ஒரே பள்ளியில் பி.டி ஆசிரியராக ‘ஆடுகளம்’ கிஷோர், மேத்ஸ் டீச்சராக அவரது மனைவி சுபத்ரா ராபர்ட் பணியாற்றுகின்றனர். கிஷோர் படகரும் கூட. இதனால் கிஷோருக்கு வேலை பறிபோகிறது. குடும்பம் ஒருபுறம், மனைவி மற்றும் வாரிசுகள் மறுபுறம், எதிர்கொள்ளும் பிரச்னைகள் சூழ, கிஷோருக்கு வாழ்க்கை என்ன கற்றுக்கொடுக்கிறது? அவரது வாரிசுகள் என்ன கற்றுக்கொண்டனர் என்பது மீதி கதை. ‘ஆடுகளம்’ கிஷோர், இனி குணச்சித்திர கதையின் நாயகனாக பல படங்களில் நடிப்பார் என்று நம்பலாம். சுபத்ரா ராபர்ட், மனதை கவர்கிறார். அவரது மகளாக தனன்யா வர்ஷினி, மகனாக ஜஸ்வந்த் மணிகண்டன் பொருத்தமான தேர்வு. ஹரீஷ் உத்தமன் வில்லனா, நல்லவரா என்பதில் குழப்பம். ஜார்ஜ் மரியனை வீணடித்து விட்டனர். சங்கர் ரங்கராஜனின் இசை, இதம். தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு சிறப்பு. தயாரித்து இயக்கியுள்ள திரவ், அன்பை பரப்ப வேண்டும் என்று பாடம் நடத்தி இருக்கிறார். அதுவும், ரொம்ப மெதுவாக.
