×

தாஷமக்கான் படத்தில் நடிக்க தயங்கினேன்: ஹரீஷ் கல்யாண்

சென்னை: இடா புரொடக்‌ஷன்ஸ், திங்க் ஸ்டுடியோஸ் சார்பில் ‘லிப்ட்’ வினீத் வரபிரசாத் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம், ‘தாஷமக்கான்’. ஹரீஷ் கல்யாண், பிரீத்தி முகுந்தன், சத்யராஜ், சுனில், மேகா ராஜன் நடித்துள்ளனர். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்ய, மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்துள்ளார். ஜி.மதன் எடிட்டிங் செய்துள்ளார்.

ராஜூ சுந்தரம், பாபா பாஸ்கர், அமீர் நடனப்பயிற்சி அளித்துள்ளனர். ஓம் பிரகாஷ், தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சி அமைத்துள்ளனர். படத்தின் டைட்டில் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு கறி சப்ளை செய்யும் இடம், சென்னையிலுள்ள தாஷமக்கான். இதில் நான் ராப் இசைக்கலைஞராக நடித்துள்ளேன்.

இதற்கு முன்பு ராப் இசையில் கலக்கியிருந்த அனைவரும் எனக்கு இன்ஸ்பிரேஷன். சென்னை மாநகரின் இன்னொரு முகத்தை காட்டும் கதையை கொண்ட இப்படத்தில், இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதை நன்கு உணர்ந்து பிரிட்டோ மைக்கேல் கலக்கியுள்ளார்.

ராப், பேட்டில் இசை, ரொமான்ஸ் போன்ற ஜானரில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கேரக்டருக்கு நான் செட்டாவேனா என்று தயங்கினேன். டைரக்ரிடம் கேட்டபோது, மற்றவர்களும் அப்படி சந்தேகப் படுகிறார்கள் என்றார். அப்போதே முடிவு செய்துவிட்டேன், மற்றவர்களின் சந்தேகங்களை உடைத்து நொறுக்குவதற்காக இந்த கேரக்டரில் நடித்தே ஆக வேண்டும் என்று.

Tags : Kalyan ,Chennai ,Vineet Varaprasad ,Ida Productions ,Think Studios ,Harish Kalyan ,Preethi Mukundan ,Satyaraj ,Sunil ,Mega Rajan ,Manimozhiyan ,Ramathurai Stadium ,Madan ,Raju Sundaram ,Baba Baskar ,Amir ,Om Prakash ,Dinesh Suparayan ,Tamil Nadu ,
× RELATED சாரா விமர்சனம்