×

மாஸ்டர் பட இயக்குனர் சேவியர் பிரிட்டோ இல்லம் மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: மாஸ்டர் பட இயக்குனரும் நடிகர் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் விருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. செல்போன் உதிரிபான தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் சேவியர் பிரிட்டோவிற்கு தொடர்பிருப்பதான தகவல் வெளியாகியுள்ளது. Xiomi செல்போன் நிறுவன உரிதி பாக இறக்குமதியை சேவியர் பிரிட்டோ நிறுவனம் மேற்கொள்கிறது.

வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடப்பதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை அடையாறில் உள்ள சேவியர் பிரிட்டோ வீட்டில் தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூருவில் உள்ள சேவியர் பிரிட்டோவிற்கு நொந்தமான அலுவலங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Xavier Brito ,
× RELATED திரைப்படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை