×

ஸ்ரீபிரியங்கா கனவு நிறைவேறியது

தமிழில் வெளியான ‘நிலா மீது காதல்’, ‘அகடம்’, ‘13ஆம் பக்கம் பார்க்க’, ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கதிரவனின் கோடை மழை’, ‘பிச்சுவா கத்தி’, ‘ஸ்கெட்ச்’, ‘சரணாலயம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்த ‘மிக மிக அவசரம்’ படம் ரசிகர்களிடம் அவரை நன்கு அடையாளப்படுத்தியது. புதுச்சேரியில் வசிக்கும் தமிழ்ப் பெண்ணான அவர், ‘தமிழ் நடிகை என்பதாலேயே எனக்கு யாரும் புதுப்பட வாய்ப்பு தருவதில்லை’ என்று பல சினிமா விழாக்களில் பேசி கண் கலங்கி இருக்கிறார்.

இந்நிலையில், நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு சேரன் நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ படத்தில் நல்ல கேரக்டரில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நந்தா பெரியசாமி இயக்கத்தில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் நடித்து முடித்துள்ள சேரன், அடுத்து இசக்கி கார்வண்ணன் இயக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மற்றும் லால், தீபா, வேல.ராமமூர்த்தி நடிக்கின்றனர். லஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.

Tags : Sripriyanka ,
× RELATED தமிழ் பெண்கள் புறக்கணிப்பு : ஸ்ரீபிரியங்கா கவலை