×

ராஜமவுலி பட விழாவில் பாட்டுப் பாட ஸ்ருதிஹாசனுக்கு ரூ.1 கோடி

ஐதராபாத்: பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி இந்திய மக்களின் கவனத்தை பெற்று வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலி படத்தின் மூலம் தன்னை நிரூவித்த ராஜமௌலி அடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கினார். இப்படம் மூலம் ராஜமௌலி ஆஸ்கர் மேடை வரை சென்றார்.

அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கி வரும் படம் தான் வாரணாசி. மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் ஆகியோரை வைத்து இயக்கியுள்ள இப்படம் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் வெளியீட்டு எந்த ஒரு படத்திற்கும் நடக்காத அளவிற்கு படு பிரம்மாண்டமாக நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே ரூ. 27 கோடி செலவு ஆகியுள்ளதாம். எல்இடி ஸ்டேஜிற்காக மட்டுமே ரூ. 8 கோடி செலவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சி நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் பாடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார். அதற்காக ஸ்ருதிஹாசனுக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Tags : Shruti Haasan ,Rajamouli Film Festival ,Hyderabad ,SS Rajamouli ,Rajamouli ,Ram Charan ,Jr. ,Oscar ,Mahesh Babu ,Priyanka Chopra ,Prithviraj ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...