- அஜித் குமார்
- மலேஷியா
- துபாய்
- ஜெர்மனி
- அஜித் ரெட் எண்ட்
- கிரெவாண்டிக் ஐரோப்பிய தொடர்
- மைக்கேலின் லே மான்ஸ் கோப்பை
- ஆசிய லு மேன்ஸ் தொடர்

புதிய படத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டு கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித் குமார், கடந்த ஆண்டு முதல் மலேசியா, துபாய், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடந்த கார் ரேஸில் பங்கேற்று பரிசு வென்றார். இந்நிலையில், 2026-27ம் ஆண்டுகளுக்கான ‘அஜித் ரெட்ஆண்ட்’ அணி பங்கேற்கும் கார் ரேஸ் அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு கிரெவன்டிக் ஐரோப்பிய தொடர், மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை, ஆசிய லீ மான்ஸ் தொடர் நடக்கிறது.
அதன்படி கிரெவன்டிக் ஐரோப்பிய தொடர் இம்மாதம் 20 முதல் 22ம் தேதி வரை இத்தாலி முகெல்லோ சர்க்யூட்டிலும், வரும் ஏப்ரல் 17, 19ம் தேதிகளில் பெல்ஜியம் சர்க்யூட் டி ஸ்பா ஃபராங்கோர்சாம்ப்ஸிலும், வரும் ஜூன் 5 முதல் 7ம் தேதி வரை பிரான்ஸ் சர்க்யூட் பால் ரிக்கார்ட்டிலும், வரும் ஜூலை 3 முதல் 5ம் தேதி வரை ஜெர்மனி நூர்பர்க்கிலும், வரும் செப்டம்பர் 18 முதல் 20ம் தேதி வரை ஸ்பெயின் சர்க்யூட் டி பார்சிலோனாவிலும் நடக்கிறது. மிச்செலின் லீ மான்ஸ் தொடர் வரும் ஏப்ரல் 12ம் தேதி பார்சிலோனா, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும், வரும் மே 3ம் தேதி பிரான்ஸ் லீ காஸ்டெல்லெட்டிலும், வரும் ஜூலை 5ம் தேதி இத்தாலி இமோலாவிலும்,
வரும் ஆகஸ்ட் 23ம் தேதி பெல்ஜியம் சர்க்யூட் டி ஸ்பா ஃபராங்கோர்சாம்ப்ஸிலும், வரும் செப்டம்பர் 13ம் தேதி யு.கேவில் சில்வர்ஸ்டோனிலும், வரும் அக்டோபர் 10ம் தேதி போர்ச்சுகல் போர்டிமாவோவிலும் நடக்கிறது. ஆசிய லீ மான்ஸ் தொடர் வரும் நவம்பர் 13 முதல் 15ம் தேதி வரை அபுதாபி யாஸ் மெரினா சர்க்யூட்டிலும், வரும் நவம்பர் 20 முதல் 22ம் தேதி வரை யுஏஇ துபாய் ஆட்டோட்ரோமிலும், அடுத்த 2027ம் ஆண்டு ஜனவரி 15 முதல் 17ம் தேதி வரை மலேசியா செபாங் இண்டர்நேஷனல் சர்க்யூட்டிலும் நடக்கும் கார் பந்தயங்களில் அஜித் குமார் பங்கேற்கிறார்.

