×

ஒரே துப்பாக்கியில் 50 பேரை சுடுவதா?

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.ராஜா தயாரிக்க, கமல்.ஜி எழுதி இயக்கியுள்ள படம், ‘நெல்லை பாய்ஸ்’. அறிவழகன், ஹேமா ராஜ்குமார், வேல.ராமமூர்த்தி நடித்துள்ளனர். ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ளார். படம் குறித்து கமல்.ஜி கூறுகையில், ‘இப்படம் நகரம் சார்ந்த நட்பு மற்றும் காதலை பற்றி பேசுகிறது. நகரத்து நட்புக்கும், நெல்லையின் நட்புக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறோம்’ என்றார்.

தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவருமான கே.ராஜன் கூறும்போது, ‘ரசிகர்கள் சின்ன படம், பெரிய படம் என்று பார்ப்பது இல்லை. அதில் நல்ல கதை இருக்கிறதா? அதை ஒழுங்காக படமாக்கி இருக்கிறார்களா என்றுதான் பார்க்கிறார்கள். கடந்த ஒரு வருடத்தை எடுத்துக்கொண்டால், ஓடிய படங்கள் எல்லாம் சிறுமுதலீட்டு படங்கள்தான். சின்ன படங்கள் ஓடுகின்றன. மக்கள் நல்ல படங்களை பார்க்கிறார்கள்.

இன்று தமிழ் கலாச்சாரத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கும் படங்கள்தான் ஏராளமாக ரிலீசாகின்றன. கஞ்சா கடத்தல், கொலை, கொள்ளை இப்படித்தான் நிறைய படங்கள் இருக்கின்றன. ஒரே துப்பாக்கியில் 50 பேரை சுடுகிறார்கள். இதுபோல் மிகவும் செயற்கையாக படமாக்குகிறார்கள். யதார்த்தமான படங்களை உருவாக்கினால், அதை தமிழ் மக்கள் பார்க்க தயாராக இருக்கிறார்கள். ‘நெல்லை பாய்ஸ்’ படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்றார்.

Tags : V. Raja ,White Screen Productions ,Kamal ,Arivazhagan ,Hema Rajkumar ,Vela Ramamoorthy ,Ravindran ,Rashanth Arvin ,Ji ,Nellai ,Film Distributors Association ,President ,K. Rajan ,
× RELATED திருமண தகவலை மறுக்காத ராஷ்மிகா