×

ஆர்யா நடிப்பில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்

சென்னை: சசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’, ‘கொடிவீரன்’, கார்த்தி நடித்த ‘கொம்பன்’, ‘விருமன்’, விஷால் நடித்த ‘மருது’, கவுதம் கார்த்திக் நடித்த ‘தேவராட்டம்’, விக்ரம் பிரபு நடித்த ‘புலிக்குத்தி பாண்டி’ ஆகிய படங்களை எழுதி இயக்கிய எம்.முத்தையா, தற்போது ஆர்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதற்கு ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதை ஜீ ஸ்டுடியோஸ், டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு ேஜாடியாக நடித்திருந்த சித்தி இட்னானி, சசி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக ‘நூறு கோடி வானவில்’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் ஆர்யா ஜோடியாக, கிராமத்துப் பெண் கேரக்டரில் நடிக்கிறார். இதன் கதை ராமநாதபுரம் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் கருப்புச்சட்டை, வேஷ்டி அணிந்து, முறுக்குமீசையுடன் நாற்காலியில் கெத்தாக அமர்ந்திருக்கும் ஆர்யாவின் பின்னால், ‘நான் ஒருதடவை சொன்னா… நூறுதடவை சொன்ன மாதிரி’ என்று பன்ச் டயலாக் பேசிய ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’ படத்தின் போஸ் வரையப்பட்டுள்ளது….

The post ஆர்யா நடிப்பில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் appeared first on Dinakaran.

Tags : Muthuramalingam ,Kadar Patsa ,Arya ,Chennai ,Sasikumar ,Karthi ,Vishal ,Gautham Karthik ,
× RELATED சேரன்மகாதேவியில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி