×

இயக்குனருக்கு ஜோடியாகும் சான்வீ

ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேம காதல்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இளன். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் நடித்த ‘ஸ்டார்’ என்ற படத்தை இயக்கினார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பிறகு தனது 3வது படத்தை இயக்கி தானே ஹீரோவாக நடிக்க திட்டமிட்டார் இளன். அதன்படி தற்போது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் ஹீரோயினாக ‘குடும்பஸ்தன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த சான்வீ மேகனா இணைந்து நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. மேலும், ‘பியார் பிரேம கல்யாணம்’ என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் ‘பியார் பிரேம காதல்’ படத்திற்கும் இதற்கும் எந்தவித சம்மந்தமும் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

Tags : Sanvi ,Ilan ,Harish Kalyan ,Raiza Wilson ,Kavin ,AGS Entertainment ,Kudumbasthan ,
× RELATED தூக்கம் இல்லாததால் உடல்நிலை பாதிக்கிறது: ராஷ்மிகா கவலை