×

‘பயம் உன்னை விடாது’ பர்ஸ்ட் லுக்

இயக்குனரும், நடிகருமான சரவண சுப்பையா, நடிகர்கள் சவுந்தரராஜா, தங்கதுரை, மவுரி ஆகியோர் இணைந்து ‘பயம் உன்னை விடாது…!’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். எஸ்.கே எண்டர்டெயின்மெண்ட், ஐ ரோஸ் எண்டர்டெயின்மெண்ட், ராதா திரைக்கோணம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கி.மு.இளஞ்செழியன் எழுதி இயக்கியுள்ளார். கதிரவன், நந்தினி கிருஷ்ணன், கே.எஸ்.ஐஸ்வர்யா, பேபி இ.ஜெ.மதிவதனி, விஜய் கண்ணன், கணபதி கருணாநிதி, அருண் பிரசாத், மணிகண்ட ராஜன், கதிர்காமன், சித்ரா, கி.மு.இளஞ்செழியன் நடித்துள்ளனர்.

தயா ரத்னம் இசை அமைக்க, முரளி தங்கவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்பு சித்ரன் அரங்குகள் அமைக்க, ஈஸ்வரமூர்த்தி குமார் எடிட்டிங் செய்துள்ளார். விஜய் கண்ணன், சந்தோஷ் ராவ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Tags : Saravana Subbaiah ,Soundararaja ,Thangadurai ,Maury ,SK Entertainment ,I Rose Entertainment ,Radha ,Thirikonam ,K.M. Ilancheliyan ,Kathiravan ,Nandini Krishnan ,K.S. Aishwarya ,Baby E.J. Mathivadhani ,Vijay Kannan ,Ganapathy Karunanidhi ,Arun Prasad ,Manikanda Rajan ,Kathirgaman ,Chitra ,Daya Ratnam ,Murali Thangavelu ,
× RELATED சாரா விமர்சனம்