- சென்னை
- எம்.எஸ். மூர்த்தி
- மித்ரா படங்கள்
- சபரி
- ரோஹித்
- ரக்ஷிதா மகாலட்சுமி
- ஸ்வேதா
- பவன் கிருஷ்ணா
- K.R விஜயா
- கே.எஸ். வெங்கடேஷ்
- எஸ். சினேகா
- குமாரி கனிஷ்கா
- ஸ்ரீலேகா
- சிங்கம் புலி
- புஜ்ஜி பாபு
- சாம்ஸ்
- அம்பானி ஷங்கர்
- முல்லைப்
- கோதண்டம்
- பி.எல். தேனப்பன்
சென்னை: மித்ரா பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படத்திற்கு ‘99/66 – தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு’ என்று வித்தியாசமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு ‘‘99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு” என்று பெயர் வைத்துள்ளோம். அந்தக் குடியிருப்புப் பகுதியில் அவ்வப்போது நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் பின்னணியில் படம் உருவாகியுள்ளது’’ என்றார்.
