×

படத்துக்கு பதிலாக வெப்சீரிஸ் வாய்ப்பு

மறைந்த நடிகரும், பாடகருமான பெரிய கருப்பு தேவரின் மகன் பி.கே.விருமாண்டி. அவர் இயக்குனராக அறிமுகமாகும் படம், க/பெ ரணசிங்கம். இதில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இப்படத்தின் கேரக்டருக்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விருது கிடைக்கும் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள். இதில் முக்கிய கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ் குமார் தங்கை பவானிஸ்ரீ அறிமுகமாகிறார். அவரே டப்பிங் பேசியிருக்கிறார். இப்படம் ரிலீசாவதற்கு முன்பே, சுதா கொங்கரா இயக்கியுள்ள வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். தவிர, முதல்முறையாக தனது அண்ணன் இசையிலும் பாடியிருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்துள்ள சூரரைப்போற்று படத்துக்கு ஆடிஷன் நடந்தபோது, படக்குழுவினர் பவானிஸ்ரீயை வரவழைத்து பார்த்துள்ளனர். அப்போது அவரை தேர்வு செய்யாத சுதா கொங்கரா, இப்போது வெப்சீரிஸில் நடிக்க வைத்திருக்கிறார்.

Tags :
× RELATED சாமானியன் விமர்சனம்