×

ரைசாவின் ஹேஷ்டேக் லவ்

பியார் பிரேமா காதல் படத்துக்கு பிறகு விஷ்ணு விஷாலுடன் எப்ஐஆர், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் ரைசா வில்சன். அடுத்து தாணு தயாரிப்பில் ஹேஷ்டேக் லவ் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அட்லியின் உதவி இயக்குனர் போஸ்கோ இயக்குகிறார். மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் நடித்த வால்டர் பிலிப்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

இது பற்றி ரைசா கூறும்போது, ‘படத்தில் அப்பாவித்தனமான பப்ளி கேரக்டரில் நடிக்கிறேன். திருமண போட்டோகிராபராக வால்டர் பிலிப்ஸ் நடிக்கிறார். அவரை சந்தித்த பிறகு எனது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்தான் கதை. அது டிவிஸ்ட் கலந்து ரொமான்டிக் கதையாக படம் சொல்லும்’ என்றார்.

Tags : Raisa ,
× RELATED மீண்டும் காதலில் விழுவேன்: சொல்கிறார் ஸ்ருதிஹாசன்