×

நீலகிரியில் மழையால் எவ்வித பெரிய பாதிப்பும் இல்லை: ஆ.ராசா பேட்டி

ஊட்டி: நீலகிரியில் மழையால் எவ்வித பெரிய பாதிப்பும் இல்லை என ஆ.ராசா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்தது. இதனால் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் பல்வேறு இடங்களிலும் புதிதாக அருவிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட எல்லையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு மற்றும் மரங்களை அகற்ற 30க்கும் மேற்பட்ட குழுக்கள் ஜேசிபி துணையுடன் சாலையை சீரமைத்து வருகிறது.

இந்நிலையில் நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக எம்.பி. ஆ.ராசா ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் கன மழையால் சேதமடைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டி அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் , நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நிலையில் 4 மணி நேரத்தில் சாலை சரி செய்யப்பட்டு போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் மழையால் எவ்வித பெரிய பாதிப்பும் இல்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதலமைச்சர் தொலைபேசியில் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார் இவ்வாறு கூறினார்.

The post நீலகிரியில் மழையால் எவ்வித பெரிய பாதிப்பும் இல்லை: ஆ.ராசா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Neelgiri ,Raza ,Nilgiri ,Raisa ,Rasa ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால்...