×

காட்டுக்கு போகும் ரஜினியின் வில்லன்

டிஸ்கவரி சேனலில் வரும் பியர் கிரில்ஸின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன் மைசூர் காட்டு பகுதிக்கு சென்றார் ரஜினிகாந்த். காலையில் சென்றவர் சில மணி நேர படப்பிடிப்பில் பங்கேற்றார். முள் குத்தியதால் காயம் ஏற்பட்டது இதையடுத்து மாலையே திரும்பிவிட்டார்.

தற்போது இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகரும் ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்த அக்‌ஷய்குமார், நடிகை தீபிகா படுகோன், கிரிக்கெட் கேப்டன் விராத் கோஹ்லி தனித்தனி நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். பிரபலங்களுக்கு சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது இந்த நிகழ்வுகள் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.

Tags : villain ,Rajini ,
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...