×

வெப்சீரிஸில் நடிக்க விருப்பம் - கேத்ரின் தெரசா

மெட்ராஸ் மற்றும் கதகளி, கணிதன்,  கடம்பன், நீயா 2, அருவம் ஆகிய படங்களில் நடித்தவர், கேத்ரின் தெரசா. தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடிக்கிறார். அவர் கூறியதாவது; தமிழில் சிறிய இடைவெளி ஏற்பட்டது உண்மைதான். இதற்கு காரணம், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நான் நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், தமிழில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

விரைவில் அந்த இடைவெளி குறையும் என்று நம்புகிறேன். தற்போது சில இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளேன். அதில் நான் நடிக்க இருக்கும் புதுப்படங்கள் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்துள்ளேன்.

இதில் ராசி கன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோரும் நடித்துள்ளனர். தற்போது பல முன்னணி நடிகைகள் வெப்சீரிஸில் நடித்து வருகின்றனர். எனக்கும் அந்த விருப்பம் இருக்கிறது. வெப்சீரிஸில் நடிப்பற்காக ஒரு கதை கேட்டுள்ளேன். முன்பிருந்ததை விட இப்போது நான்  தமிழில் சரளமாகப் பேசுகிறேன்.

Tags : Katherine Theresa ,
× RELATED மகாராஜா விமர்சனம்