×

தேங்காய் முந்திரி பர்ஃபி

என்னென்ன தேவை?

கொப்பரைத்துருவல் - 2 கப்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
பொடித்த முந்திரி - 1 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் - 1/4 கப்,
தூவுவதற்கு பொடித்த சர்க்கரை - தேவைக்கு,
காய்ந்த தேங்காய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
அலங்கரிக்க முந்திரி - சிறிது.

எப்படிச் செய்வது?

கொப்பரைத் துருவல், பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். கடாயில் நெய் விட்டு கலந்த கலவையை சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் கிளறவும். இது கெட்டியாக சுருண்டு வரும்போது அதன்மேல் தேங்காய்த்தூள், சர்க்கரைத்தூள் தூவி நெய் தடவிய தட்டில் கொட்டி, முந்திரியால் அலங்கரித்து ஆறியதும் விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?