துரின்: டாப் 8 வீரர்கள் பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி போட்டியில் செர்பியாவின் 35 வயதான நோவக் ஜோகோவிச், நார்வேயின் 23 வயதான கார்ஸ்பர் ரூட் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் கடும் போட்டி நிலவிய நிலையில், 7-5 ஜோகோவிச் கைப்பற்றினார். 2வது செட்டில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 6-3 என எளிதாக தன்வசப்படுத்தினார். இதன் மூலம் 7-5, 6-3 என ஜோகோவிச் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.7 ஆண்டுக்கு பின் அவர் ஏடிபி பைனல்ஸ் தொடரில் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் 2008, 12, 13, 14, 15 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தார். 6வது முறையாக பட்டம் வென்றுள்ள ஜோகோவிச் அதிக முறை ஏடிபி பைனல்ஸ் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் ரோஜர் பெடரருடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளார். பட்டம் வென்ற ஜோகோவிச் சுமார் ரூ. 39 கோடி பரிசு தொகையுடன் 1500 தரவரிசை புள்ளிகளும் பெற்றார்….
The post ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன் appeared first on Dinakaran.