×

பெயரை மாற்றிய மற்றொரு ஹீரோ

நெடுஞ்சாலை பட ஹீரோ ஆரி தனது பெயரை ஆரி அருஜுனா என புத்தாண்டையொட்டி மாற்றிக்கொண்டதுடன் இனிமேல் தன்னை அப்படியே அழைக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதேபோல் மற்றொரு பிரபல நடிகர் பெயரை மாற்றியிருக்கிறார். தமிழில் நோட்டா படத்தில் நடித்ததுடன் அர்ஜூன் ரெட்டி, டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் போன்ற வெற்றி படங்களை கொடுத்து பரபரப்பாக பேசப்பட்டவர் விஜயதேவரகொண்டா.

தற்போது ‘தி வேல்ர்ட் பேமஸ் லவர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவரது பெயரை தேவரகொண்டா விஜய் சாய் என மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் க்ரந்தி மாதவ் சாய்பாபா பக்தர். அவர்தான் விஜயதேவரகொண்ட பெயரை தேவரகொண்டா விஜய் சாய் என மாற்றி வைத்திருக்கிறாராம்.

விஜயதேவரகொண்டா நடித்து வெளியான சமீபத்திய படம் வெற்றி பெறவில்லை. எனவே சென்டிமென்ட்டாக நியூமராலஜிபடி அவர் பெயரை  மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி விஜயதேவரகொண்டா தரப்பில் கேட்டபோது. விஜய தேவரகொண்டாவுக்கு நியூமராலஜியில் நம்பிக்கை கிடையாது. சினிமாவில் அவரது பெயரை மாற்றுவதற்காக நாங்கள் எதுவும் செய்ய முடியாது’ என்றனர்.

Tags : hero ,
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்