×

அரையிறுதியில் ஜோகோவிச்

டுரின்: ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் விளையாட செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் தகுதி பெற்றார். சிவப்பு பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ரஷ்யாவின் ஆந்த்ரே ருப்லேவுடன் மோதிய ஜோகோவிச் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 8 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னதாக, தனது முதல் லீக் ஆட்டத்தில் சிட்சிபாஸை வீழ்த்தி இருந்த ஜோகோவிச் தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தார். அவர் தனது கடைசி ரவுண்டு ராபின் லீக் ஆட்டத்தில் நாளை டானில் மெட்வதேவை (ரஷ்யா) எதிர்கொள்கிறார். பச்சை பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தனது 2வது ரவுண்டு ராபின் சுற்றில் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர் அலியஸ்ஸிமியிடம் (22வயது, 6வது ரேங்க்) 3-6, 4-6 என நேர் செட்களில்  போராடி தோற்றார். இப்போட்டி 1 மணி, 57 நிமிடங்களுக்கு நீடித்தது. தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்ததால், நடால் அரையிறுதிக்கு முன்னேறுவது கேள்விக்குறியாகி உள்ளது….

The post அரையிறுதியில் ஜோகோவிச் appeared first on Dinakaran.

Tags : Djokovich ,Turin ,Novak Djokovic ,ATP Finals tennis ,Dinakaran ,
× RELATED ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர்: பிரிட்ஸை வீழ்த்தி சின்னர் சாம்பியன்