×

பரத்துக்கு மனஉளைச்சலை தந்தது யார்?

பரத் நடித்து திரைக்கு வந்த காளிதாஸ் படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அதில் பரத் பேசும்போது,’நான் சினிமாவிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. எல்லா ஹீரோக்களுக்கும் நடப்பதுபோல் எனக்கும் சில படங்கள் தவறி இருக்கிறது. என்றாவது நல்லபடம் அமையும் என்று நினைத்தேன். அது காளிதாஸ் படமாக அமைந்தது. இப்படத்தை சினிமாக்காரர்கள் நிறையபேர் பார்த்தனர். படம் நல்லாருக்கு. பரத்துக்கு மார்க்கெட் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

அது எனக்கு நிறைய மன உளைச்சலைத் தந்தது. ஆனால் இப்படத்தை பத்திரிகைகள்தான் பெரிதாக  கொண்டாடின. நெகட்டிவ் ரிவியூ ஒன்று கூட இல்லை. நல்லபடம் எடுத்தால் மட்டும் போதாது, அதை எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பது மிக முக்கியம்’ என்றார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மணி தினகரன், இயக்குனர் ஸ்ரீசெந்தில், அபிஷேக், சக்திவேல், ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்ட பட குழுவினர் பங்கேற்றனர்.

Tags : Param ,
× RELATED தடகள வீரர் ஒலிம்பிக் நாயகன் நீரஜ்...