×

ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் விளைநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பூம்புகார், தரங்கம்பாடி பகுதிகளில் அதிக அளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தில் சேருவதற்கான தேதியை இம்மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். …

The post ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisamy ,Mayaladududurai ,Mayaladudurai ,Interim Secretary General ,Edapadi Palanisamy ,Edappadi Palanisami ,
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்