×

திருக்கோயில் உழவாரப் பணிகள் தொடர்பாக காணொலிக் காட்சி மூலம் அமைச்சர் கே.சேகர் பாபு ஆய்வு..!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருமேனி பாதுகாப்பறைகள்,  சட்டமன்ற அறிவிப்புகள் தொடர்பான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்தல் மற்றும் திருக்கோயில் உழவாரப் பணிகள் தொடர்பாக காணொலிக் காட்சி மூலம் அனைத்து மண்டல இணை  ஆணையர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். உலோகத் திருமேனிகளை பாதுகாக்கும் வகையில் 1 திதிருக்கோயில்களில் ரூ.156.67 கோடி மதிப்பீட்டில் 1,835 திருமேனி பாதுகாக்கும் அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் 1,200 திருமேனி பாதுகாப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளன. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், 2021 – 2022 மற்றும் 2022 – 2023 நிதியாண்டுகளின் சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்புகளின்படி நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், திருக்கோயில்களின் சுற்றுபுறம், உள்பிரகாரங்கள், சன்னதிகளை தூய்மையாக பராமரிக்கும் வகையில் நடைபெற்று உழவாரப்பணிகள் தொடர்பாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டு மண்டல  இணை ஆணையர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன், இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், திருமதி மா.கவிதா, இணை ஆணையர்கள் திரு.பொ.ஜெயராமன், திரு.ஆர்.செந்தில்வேலன், செயற்பொறியாளர் திரு.செல்வராஜ்  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். …

The post திருக்கோயில் உழவாரப் பணிகள் தொடர்பாக காணொலிக் காட்சி மூலம் அமைச்சர் கே.சேகர் பாபு ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,K.K. Sekar Babu ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,G.K. ,Stalin ,Hindu Religious Foundation ,Zegarbabu Thirumeni ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...