×

“நாட்டில் மதமோதலை உருவாக்குகின்றனர்’’2024 தேர்தலில் பாஜ வெற்றிப்பெற முடியாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் பேச்சு

பெரம்பூர்: வட சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நவம்பர் புரட்சி தினத்தையொட்டி பெரம்பூர் பகுதியில் செஞ்சட்டை பேரணி நடைபெற்றது. இதன் பின்னர் பெரம்பூர் கவுதமபுரத்தில் ‘’நவம்பர் புரட்சியை போற்றுவோம்’’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது; உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. உழைப்பாளி வர்க்கம் முதன் முதலில் ஆட்சி கட்டிலை பிடித்த தினத்தை கொண்டாடுவதே நவம்பர் புரட்சி. சோவியத் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், மனித சுரண்டலுக்கு முடிவு கட்டி ஒரு சோசலிச ஆட்சியை உருவாக்கியது.நாக்கில் நரம்பில்லாத மோடி போல் ஒருவரை பார்க்க முடியாது. குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலவரத்தை தூண்டுகிறார்கள். இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்புகளை பிஜேபி அரசு உருவாக்குகிறது. பிஜேபி அரசு ஒரு மதவெறி கூட்டம். மதவெறியை உண்டாக்கி ரத்தவெள்ளத்தில் இந்தியாவை மூழ்கடிக்கும் ஆட்சியினை மோடி தலைமையிலான அரசு செய்து வருகிறது. இந்தியாவில் உணவு பஞ்சம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 2024 தேர்தலில் பிஜேபி ஒரு தொகுதியில்கூட டெபாசிட் வாங்க மாட்டார்கள்.கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தில் அண்ணாமலை, கவர்னர் ஆகியோர் மாநில அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். மத மோதலை உண்டாக்கும் அரசாக பிஜேபி செயல்படுகிறது. ஆளுநரை வைத்து போட்டி சர்க்காரை உண்டாக்கி வருகிறது. இவ்வாறு கூறினார்….

The post “நாட்டில் மதமோதலை உருவாக்குகின்றனர்’’2024 தேர்தலில் பாஜ வெற்றிப்பெற முடியாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Baja ,2024 election ,Marxist Communist ,Balakrishnan ,Perampur ,Marxist Communist Party ,North Chennai district ,Chenchetta rally ,November Revolution Day ,Marxist ,Communist ,
× RELATED அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக...