×

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ. ராஜினாமா

அகமதாபாத்: குஜராத்தில் 10 முறை காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருந்தவர் மோகன்சிங் ரத்வா. பழங்குடியின தலைவர். இம்மாநில காங்கிரசில் பலம் வாய்ந்த தலைவராக இருக்கிறார். இம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில், நேற்று இவர் தனது எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார். மோகன் சிங் கடைசியாக சோட்டா உதய்பூர் தொகுதி எம்எல்ஏ.வாக இருந்தார். இவர் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதால் தனது மகனுக்கு எம்எல்ஏ. சீட் கேட்டார். காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி. நரண் ரத்வாவும் அந்த தொகுதியில் அவரது மகனுக்கு சீட் கேட்டுள்ளார். இந்நிலையில், மோகன்சிங் பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ. ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Gujarat Congress ,AHMEDABAD ,Mohensingh Rathwa ,Congress ,Gujarat ,Dinakaran ,
× RELATED வெளிநாடுகளில் இருந்து குஜராத்துக்கு கடத்திய ரூ.3.50 கோடி கஞ்சா பறிமுதல்