×

பொம்மை ரயில் கவிழ்ந்து சிறுவன் பரிதாப பலி

சண்டிகர்: பஞ்சாபின் நவான்ஷாரில் உள்ள பாலாசவுர் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் சனியன்று இரவு அந்த பகுதியில் உள்ள மால் ஒன்றுக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த சிறுவர்களுக்கான பொம்மை ரயிலின் கடைசி பொட்டியில் ஷாபாஸ்(10) அமர்ந்திருந்துள்ளான். ரயில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்துள்ளது. இதில் சிறுவன் ஷாபாசுக்கு தலையில் பலத்த காயமேற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்து செல்லப்பட்டான். அங்கு அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post பொம்மை ரயில் கவிழ்ந்து சிறுவன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Balasaur ,Punjab ,Nawanshar ,Shahbaz ,
× RELATED பஞ்சாப் அரசு பள்ளிகளில் புத்தக பை இல்லாத தினம் அறிமுகம்