×

வெளிநாடுகளில் இருந்து குஜராத்துக்கு கடத்திய ரூ.3.50 கோடி கஞ்சா பறிமுதல்

அகமதாபாத்: குஜராத்துக்கு வௌிநாடுகளில் இருந்து வரும் கூரியர் பார்சல்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த 1ம் தேதி அகமதாபாத்தில் கூரியர் பார்சல்களில் இருந்து ரூ.1.12 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் வௌிநாடுகளில் இருந்து கூரியர் பார்சல்களில் குஜராத்துக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அகமதாபாத் குற்றப்பிரிவு காவல்துறை மற்றும் சுங்கத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருந்தனர். அதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் இருந்து வந்த பார்சல்களை சோதனையிட்டனர். அப்போது குழந்தைகளுக்கான பொம்மைகள், பேபி டயப்பர்கள், கதை புத்தகங்கள், சாக்லேட்டுகள், வைட்டமின் மிட்டாய்கள் போன்றவைகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. 11.6 கிலோ எடையிலான இந்த உயர்தர கலப்பின போதைப்பொருள்களின் சர்வதேச சந் விலை ரூ.3.48 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வெளிநாடுகளில் இருந்து குஜராத்துக்கு கடத்திய ரூ.3.50 கோடி கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,AHMEDABAD ,Vauinadus ,Dinakaran ,
× RELATED குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம்...