×

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையால் அருவி, ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

திருவில்லிபுத்தூர்/வத்திராயிருப்பு : மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் உள்ள அருவிகள்,நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர்,வத்திராயிருப்பு பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால், ஓடைகள், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் உள்ள சுரக்காய்பட்டி தலைமலையான் அருவி மற்றும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. செண்பக தோப்பு மீன்வெட்டி பாறை அருவி மற்றும் பேச்சியம்மன் கோயில் அருகே உள்ள நீரோடைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததால், சங்கிலிப்பாறை, மாங்கனிஓடை, தாணிப்பாறை வழுக்கல் பாறையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் லிங்கம் கோயில் ஓடை வழியாக, மாத்தூர் அணைக்கட்டு வழியாக மாத்தூர் குளத்திற்கு செல்கிறது.இந்நிலையில் விடுமுறை நாட்களில் சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் மாத்தூர் அணைக்கட்டு பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து மகிழ்கின்றனர்….

The post மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையால் அருவி, ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Thiruvilliputhur ,Vathrayaripu ,Tiruvilliputhur ,Vathirayirupu ,Dinakaran ,
× RELATED குடியிருப்புக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது