×

தண்டவாளத்தில் நுழையும் மாடுகள் கிராம தலைவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை: வந்தே பாரத் மோதலால் நடவடிக்கை

புதுடெல்லி: கால்நடைகள் மீது வந்தே பாரத் ரயில் தொடர்ந்து மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், கால்நடைகளை தண்டவாளத்தின் அருகே அனுமதிக்கக் கூடாது என்று கிராம தலைவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குஜராத்தின் காந்திநகர் – மகாராஷ்டிராவின் மும்பை இடையே, கடந்த செப்டம்பர் 30ம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார். இந்த சேவை தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் அக்டோபர் 6, 7ம் தேதிகளில் குஜராத்தில் தண்டவாளத்தில் நுழைந்த மாடுகள் மீது ரயில் மோதி, அதன் முன்பகுதி சேதமடைந்தது. இதேபோல், அதே மாதம் 29ம் தேதியும் மாடு மீது மகராஷ்டிராவில் வந்தே பாரத் ரயில் மோதியது. இதுபோல், கால்நடைகள் மீது வந்ேத பாரத் ரயில் அடிக்கடி மோதியது சர்ச்சையானது. தண்டவாளத்தில் நுழையும் கால்நடைகளை தடுக்காத அதன் உரிமையாளர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், மகாராஷ்டிராவின் பால்கரில் ரயில் வழித்தடத்தின் அருகே உள்ள கிராமங்களின் தலைவர்களுக்கு ரயில் பாதுகாப்பு படை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ‘கால்நடைகளை ரயில் தண்டவாளங்களுக்கு அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது. இதில், கால்நடையின் உரிமையாளர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக தெரிந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக, மும்பை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராம தலைவர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது….

The post தண்டவாளத்தில் நுழையும் மாடுகள் கிராம தலைவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை: வந்தே பாரத் மோதலால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,New Delhi ,Dinakaran ,
× RELATED வந்தே பாரத் லாபம் எவ்வளவு தெரியுமா?.. ஆர்டிஐ மனுதாரர் அதிருப்தி