×

கராச்சி – பெஷாவர் இடையே ரூ.82 ஆயிரம் கோடியில் பாக்.கில் ரயில் பாதை: சீனாவுடன் அடுத்த வாரம் ஒப்பந்தம்

இஸ்லாமாபாத்: பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து பெஷாவர் வரை ரூ.82 ஆயிரத்து 440 கோடி மதிப்பில் புதிய ரயில் பாதையை சீனா அமைக்கிறது. சீனா தனது ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தின் கீழ், உலகம் முழுவதும் பல நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, அந்த நாடுகளை கடனில் மூழ்கடித்து அடிமைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சீனாவிடம் கடன் வாங்கிதான், பாகிஸ்தான், இலங்ைக உட்பட 60க்கும் மேற்பட்ட ஏழை மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரம் சீரழிந்து கிடக்கிறது. ஏற்கனவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக குவாதார் துறைமுகத்துக்கு சீனா இந்த திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து பெஷாவார் வரை ரூ.82  ஆயிரத்து 440 கோடிக்கு புதிய ரயில் பாதை அமைக்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாடுகளை சேர்ந்த கூட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று முன்தினம் நடந்தது. அதில், பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில்  இருந்து பெஷாவர் வரை ரயில் பாதை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்  வரும் 1ம் தேதி  சீனா சென்று  சீன அதிபர் ஜி ஜின்பிங்கை  சந்தித்து பேசுகிறார்.  அவரது  பயணத்தின் போது, இந்த புதிய ரயில்வே  திட்ட ஒப்பந்தத்தில் 2 நாடுகளும் கையெழுத்திட உள்ளன….

The post கராச்சி – பெஷாவர் இடையே ரூ.82 ஆயிரம் கோடியில் பாக்.கில் ரயில் பாதை: சீனாவுடன் அடுத்த வாரம் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Karachi-Peshawar ,Pak-Gil ,China ,Islamabad ,Pakistan ,Karachi ,Peshawar ,
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன