×

ஜார்ஜியா மாகாண செனட் சபை தேர்தல்: தமிழர் அஸ்வின் ராமசாமி போட்டி

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண செனட் சபைக்கான வேட்பாளர் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் அஸ்வின் ராமசாமி வெற்றி பெற்றுள்ளார். அஸ்வின் ராமசாமி(23) மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது தந்தை தமிழ்நாட்டின் கோவையும், தாயார் சென்னையையும் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 1990ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறினர். இந்நிலையில் ஜார்ஜியா மாகாண செனட் சபை தேர்தலில் அஸ்வின் ராமசாமி ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக ஜனநாயக கட்சி தேர்தலில் அஸ்வின் ராமசாமி வெற்றி பெற்றுள்ளார்.

The post ஜார்ஜியா மாகாண செனட் சபை தேர்தல்: தமிழர் அஸ்வின் ராமசாமி போட்டி appeared first on Dinakaran.

Tags : Georgia Provincial Senate Elections ,Washington ,Ashwin Ramasamy ,Democratic Party ,Tamil Nadu ,Georgia State Senate ,United States ,Cove, Tamil Nadu ,Chennai.… ,Georgia Provincial Senate Election ,
× RELATED சீக்கியரை கொல்ல சதி செய்த வழக்கில்...