×

கலாசாரத்தை சீரழிக்கும் காதல் செயலிகள்: விஷம் தடவிய இனிப்பு; விட்டில் பூச்சியாய் சிக்கும் பெருசு, சிறுசு; கட்டுபாடற்ற மனதுக்கு படுகுழியே பரிசு

இது, கலி காலம். பேரழிவை நோக்கி செல்லும் சமூக, கலாசார சீரழிவுகள். தினசரி ஊடக செய்திகளாகும் அதன் பின்விளைவுகள். காதல், தேர்வு தோல்விகள், கடன்காரன் அவமதிப்பு, அப்பா திட்டினார், படியேறும் போலீஸ்.. அற்ப காரணங்கள். அதற்காக. உயிரை துறக்கும் மனிதர்கள். இவை எல்லாம் கடந்த காலம். இப்போது நாகரீகம் வளர்ந்து விட்டது; சமூகம் மாறி விட்டது. மானமாவது; மண்ணாங்கட்டியாவது. கவரி மான் வகையாறாக்கள் இப்போது மிக சொற்பம்.கடன் ஆப் தொல்லை- தற்கொலைஆன்லைன் சூதாட்டம் – தற்கொலைவலைதள காதல், கள்ளக்காதல் – கொலை, தற்கொலை… -இவையே இன்று அதிகம். அனைத்துக்கும் காரணம் ஒன்றுதான். உலகத்தை ஒற்றை விரலில் அடக்கும் கையடக்க செல்போன். கண்ணுக்கு தெரியாத மாயை… ‘இணையம்’. இவற்றை அடிப்படையாக கொண்ட விதவிதமான செயலிகள். அவற்றில் தூண்டிலில் சிக்கும் மீன்களாக மக்கள். சிறுசு, இளசு, பெரிசுகள்… அனைத்தும் இதில் அடக்கம். கலை, இலக்கியம், ஆன்மீகம், ஆட்டம், பாட்டம், படிப்பு, நடிப்பு, அறிவியல், அறிவு, கண்டுபிடிப்பு, மர்மம், இயற்கை, செயற்கை, அதிசயம், ஆனந்தம், அழகு, ஆபத்து. இன்னும் எத்தனை எத்தனையோ… கணக்கில் அடங்கா துறை, பிரிவுகளில் எண்ணற்ற செயலிகள். அறிவு வேட்கையை தூண்டும் ஆழ்கடல் முத்துகள். ஆனால், நல்லதை நாடுபவர்களை விட, அழிவை தேடுபவர்களே அதிகம்.ஹேய்… ம்ம்ம்… ஹா… ஆஹா… ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் -* நேரலை நிர்வாண அரங்கேற்றம்,* பரஸ்பர சுய இன்ப சல்லாபம்,* மனித, மிருக பாலியல் உறவு,* ஓரினச் சேர்க்கை,* கும்பல் பாலியல் உறவு,* ஆன்லைன் சூதாட்டம்,* வன்முறை ஆன்லைன் விளையாட்டு. – நடுமண்டையில் அமர்ந்து நர்த்தனமாடும் சீர்கெட்ட செயலிகள். இவற்றுக்கு தான் இப்போது மவுசும் அதிகம்;. தேடலும் அதிகம். குடும்பமாக, கும்பலாக அமர்ந்து சிரித்து மகிழும் காலம், கனா காலமாகி விட்டது. ஆளுக்கொரு மூலையே இன்றைய விருப்பம். கட்டிலில் தந்தை. சோபாவில் தாய். அக்காள் ஒரு பக்கம், தங்கை வேறு பக்கம். தனியறையில் அண்ணன். மொட்டை மாடியில் தம்பி… அவரவர் வயதுக்கு ஏற்ற செயலியில் மூழ்கும் உறவுகள். இதில், இடையூறுகள் ஏற்பட்டால், கனல் கக்கும் கண்கள். எரிமலையாக வெடிக்கும் வார்த்தைகள். அடிதடியில் முடியும் சோகங்கள்…- காதல்.. அது, ஒரு இளமை கால இனிமை.அக்கம் பக்கம், பக்கத்து தெரு, நகர்… பள்ளி, கல்லூரி பேருந்து பயணம். கலை நிகழ்ச்சிகள், திருமணம், பிறந்த நாள் விழாக்களில் தற்செயல் சந்திப்புகள். மேல் வெட்டு, கீழ் வெட்டு, ஒரக்கண் பார்வைகள்… புன்னகை பூக்கும் இதழ்கள். அதில் நடக்கும் எண்ண பரிமாற்றங்கள். பகல் நேர கற்பனைகள். தனிமையில் சிரிக்கும் இன்பங்கள். இப்படி, கண்களால் பருகி, இதயத்தில் நுழைந்து, இனிமையில் பிறப்பதே காதல். ஆனால், இன்றைய உலகமோ, காதலை கூட செயலியில் தேடுகிறது.* ‘டேட்டிங் ஆப்ஸ்’அதாவது, ‘காதல் செயலிகள்’முன் பின் தெரியாதவர்கள்… நல்லவர்களா? கெட்டவர்களா? தெரியாது. பெண், ஆணாக மாறுவாள்; ஆண், அழகிய பெண்ணாக பேசுவான். முதலில், ‘ஹாய்’ என தொடங்கும். கடைசியில், ‘ஐய்யோ’ என முடியும். இதுவே, நிஜம். பெயருக்கு தான் காதல். 90 சதவீதம் காமம், மோசடி. கெட்டது என தெரியும். ஆபத்து என புரியும். ஆனால், குரங்கு மனம்; தாவுகிறது. பட்ட பிறகே ஞானம் பிறக்கிறது. அதற்குள் மானம் கப்பல் ஏறுகிறது. பணம் பறி போகிறது. சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்… ஒரு தவிப்பு. வானத்தை வெறித்து பார்க்கும் சோகமே மிச்சம். சில நேரங்களில் உயிருக்கும் உலை வைக்கும். கொடூர கொலைகள். வகை வகையாக வலை வீசும் பற்பல காதல் செயலிகள். காதலுக்கு ஒன்று. கள்ளக்காதலுக்கு மற்றொன்று. காதலில் தோற்ற ஆண், பெண்களுக்கு ஒன்று. மண முறிப்பு செய்தவர்கள், முரண்பட்ட திருமண பந்தம், மன உளைச்சல், ஓரினச் சேர்க்கை. ஈரிணை சேர்க்கை, கூட்டுக் கலவியில் வேட்கை கொண்டவர்கள்… சமூகத்தை பாழாக்க என்னனென்ன உண்டோ. அத்தனை பேருக்கும் ஒவ்வொரு செயலிகள்… இவை, மோசடி பேர்வழிகளின் கூடாரம்; குற்றவாளிகளின் சொர்க்க பூமி. இவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும்? உலக காவலன் இன்டர்போல் விவரிக்கிறது. முகத்தை காட்ட மாட்டார்கள். ஆனால், இனிக்க இனிக்க சாட்டிங் செய்வார்கள்.* அய்யோ… அப்படியா?* ச்சோ.. உங்களுக்கா இப்படி?* அழகே அழகு… தேவதை.* வசீகரா… என் நெஞ்சினிக்க..- பரிதாபத்தை பொழிவார்கள். பாசத்தை காட்டுவார்கள். காதலை கொட்டுவார்கள். புகழ் மாலை வர்ணனைகள் வான் மழையாய் தூவும். அத்தனையும் பாசக்கயிறு. எண்ணெய் காகிதத்தின் பளபளப்பில் மயங்கும் விட்டில் பூச்சிகள். பட்டென்று சிக்கும். காட்சிகள் மாறும். கூப்பிட்ட இடத்துக்கு செல்லும். சொல்வதை எல்லாம் செய்யும். அப்பா, அம்மா சொன்னால் கேட்காது. நண்பர்கள் அறிவுரையை பொறாமை என தட்டி விடும். கஷ்டம் என போடும் நாடகத்தை நம்பும். பணம், நகைகளை அனுப்பும்.‘இது ஒரு வகை, ஆன்லைன் மெஸ்மெரிசம். உலகளவில் புரையோடிய நோய். இதை குணப்படுத்துவது எளிதல்ல. புரிய வைப்பது சுலபமல்ல.’- வேதனையை வெளிப்படுத்துகிறது இன்டர்போல். அதோடு, உங்கள் நாட்டில் எப்படி இந்த மோசடி வித்தை அரங்கேறுகிறது? தகவல் கொடுங்களேன் என்கிறது; மற்றவர்களை உஷார்படுத்த…! உறுப்பு நாடுகள் 194-க்கும் ‘ஊதா நோட்டீஸ்.’கிராம வளர்ச்சிதான்; உண்மையான வளர்ச்சி. அது வந்து விட்டதா? வருகிறதா? வந்து கொண்டிருக்கிறதா? தெரியாது. ஆனால், ஒன்றில் மட்டும் வளர்ச்சி வந்து விட்டது நிஜம். 100 சதவீதம் உறுதி. அது, டேட்டிங் செயலி பயன்பாடு. மாநகரங்களை விட, சிறு நகரங்கள், கிராமங்களில் இதன் பயன்பாடு 72 சதவீதம் அதிகமாகி விட்டதாம். அதுவும், கடந்த 2 ஆண்டுகளில்… குறிப்பாக, கொரோனா காலத்துக்கு பிறகு… பெருநகரம், நகரங்களில் ‘குப்பை கொட்டிய’ இளைஞர், இளைஞிகள், ஊரோடு போய் சேர்ந்து விட்டதே இதற்கு காரணம். அவர்களின் பொழுதுபோக்கு அம்சமாக, காதலுக்கு விருந்து படைப்பது இந்த செயலிகளே. ஒருநாளைக்கு 4 மணி நேரம் இதில் செலவாகிறது இவர்களின் காலம். இதனால், எதிர்காலம் கேள்விக்குறி. பழைய பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள், கானல் நீரானது. ‘நவீனமயம்’ தடம் மாற்றுகிறது. பயம் அறியா இளம் கன்றுகள். எதையும் ஒரு கை பார்க்கலாம் என்ற அசாத்தியம். வாழ்வது கொஞ்சம் நாள். வாழ்த்து பார்த்து விடுவோம் என்ற எண்ணம். இவையே, இன்றைய சமுதாயத்தின் பாதை மாறும் பயணத்துக்கு பட்டுக் கம்பளம். இவற்றுடன் சட்டம் தரும் அங்கீகாரம். கள்ளக்காதல், ஒரு காலத்தில் குற்றம். ஆண், பெண் ஓரினச்சேர்க்கை, ஒரு காலத்தில் குற்றம். இப்போது, அதுவே உரிமையாகி விட்டது. கணவனோ, மனைவியோ… அம்மி மிதித்து, அருந்ததி பார்த்ததை மறக்கலாம். திருமண பந்த எல்லை தாண்டலாம். விரும்பியர்களுடன் சல்லாபிக்கலாம். அதற்கும் வந்து விட்டது கள்ளக்காதல் செயலி. அதில் வேண்டியவர்களை தேடலாம்… இதனால், ‘பாலியல் பாய்ஸ், கேர்ல்ஸ்’ காட்டிலும் மழை. ஆணோடு சேரும் ஆணும், பெண்ணோடு சேரும் பெண்ணும்… ஆணுடனும், பெண்ணுடன் இன்பம் அனுபவிக்கும் வக்கிர ஜென்மங்கள். செயலியை தொட்டால், எண்ணற்ற இணைகள் வரிசை நிற்கும். தட்டி கேட்க முடியாது. அரசியல் சட்டம் தரும் வானளாவிய தனி மனித சுதந்திரம், கேடயமாக நிற்கிறது.‘பாரத நாடு பழம் பெரும் நாடு’ – உண்மைதான். உண்மையிலேயே பழைய நாடாகி தான் விட்டது. இப்போது இருப்பது புதிய பாரதம். கள்ளக்காதலை ஊக்குவிக்கும் செயலிகள் சுதந்திரமாக செயல்படுவதே இதற்கு ஆதாரம். உபயம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தந்த ஊக்கம். கள்ளக்காதல், ஓரினச் சேர்க்கை தவறில்லை. எப்போது அது சொன்னதோ; அப்போதே இந்தியாவில் புற்றீசலாய் கிளம்பி விட்டன இந்த செயலிகள். அதற்கு முன்பு வரை, இவை கடிவாளமிட்ட குதிரைகள். இப்போது, தடையற்ற பாதையில் எட்டுக்கால் பாய்ச்சலில் பாய்கின்றன. இது, விஷம் தடவிய இனிப்பு. கட்டுப்பாடற்ற மனதுக்கு படுகுழியே பரிசு. விழிப்பவன் பிழைப்பான். முரண்டு பிடிப்பவன் முட்டுச் சந்தில் நிற்பான்.   மனம் ஒரு குரங்குமனித மனம் ஒரு குரங்குஅதை ஓட விட்டால்தப்பி ஓட விட்டால்நம்மை பாவத்தில்ஏற்றி விடும்…எண்ணம் போல் வாழ்க்கை.* உலுக்கும் கொலைகள்காதல் செயலி மோகத்தால் இந்தியாவிலும் பல கொலைகள், கொள்ளைகள் நடந்துள்ளன. அவற்றில் சாம்பிளுக்கு ஒன்று இதோ…நாட்டையே உலுக்கிய இந்த கொலை நடந்த இடம் டெல்லி. ஆண்டு 2018. கொல்லப்பட்டவர் துஷ்யந்த் சர்மா. வயது 27. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர். அன்றாட பிழைப்பாளி. 2 குழந்தைகளுக்கு தந்தை. காதல் செயலி மீது ஒரு மோகம். கணக்கை தொடங்கினார். தான் ரூ. 25 கோடிக்கு அதிபதி என்றார். தம்பட்டம் அடித்தார். பிரியா சேத் (27) என்ற பெண்ணின் வலையில் வீழ்ந்தார். டெல்லியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் சந்திப்பு. ஆசையாக போன சர்மாவுக்கு அதிர்ச்சி. பெரிய பட்டாளமே அவரை சுற்றி வளைத்தது. பல கோடி கேட்டு மிரட்டியது. ‘ஐய்யா… நான் ஒரு புள்ளபூச்சி… அந்தளவுக்கு ஒர்த் இல்லைய்யா..’ என்று கதறினார். கும்பலுக்கு ஏமாற்றம். சர்மாவின் தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டது. அவருக்கு பிள்ளை பாசம். ரூ. 3 லட்சம் கொடுத்தார். பணத்தை வாங்கிய கும்பலுக்கு ஒரு பயம். சர்மாவை விடுவித்தால் ஆபத்து. பல துண்டுகளாக வெட்டி கொன்று விட்டது. இதுபோல், பல கொலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.* சென்னையில் சந்திக்கும் இடம்டேட்டிங் செயலியில் தொடர்பை ஏற்படுத்தும் இளசுகள் சந்திப்பதற்கு என்றே சென்னையில் சில இடங்கள் உள்ளன. குறிப்பாக, பெண்களை சந்திக்கும் இடங்கள். அவை, முக்கிய மால்கள் அதிகம். பெரும்பாலும், பர்சை காலியாக்கும் மால்கள்தான் அதிகம். – பார்த்ததும் பட்டென்று அனுபவிக்க துடிக்கும் மற்ற ‘ரகங்கள்’ சந்திக்கும் இடங்களாக கடற்கரைகள், விருந்தினர் மாளிகை, கிழக்கு கடற்கரை பங்களாக்கள். ஓட்டல்கள், சர்வீஸ் அபார்ட்மென்ட் போன்றவை உள்ளன.* தமிழகத்தில் ஊடுருவல்தமிழகத்தில் நகரம் முதல் குக்கிராமம் வரை இளைஞர்கள், இளம்பெண்களிடம் டேட்டிங் செயலிகள் ஊடுருவி விட்டது. இதில், இவர்களின் மனதை அதிகம் கொள்ளை கொண்டிருப்பது ‘ட்ரூலி மேட்லி.’ சென்னையில் அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி ‘டிண்டர்.’விழித்திரு… ஆராய்ந்திரு…அனுபவி; அகப்பட்டு கொள்ளாதே… காதல் செயலி விரும்பிகளுக்கு சர்வதேச போலீஸ் தரும் அறிவுரை இது. அதோடு, என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்கிறது…* விழித்திரு – நட்பு நாடும் நபரை கவனமாக தேர்ந்தெடு. தீர விசாரிப்பதே மேல்.* சந்தேகத்திரு – முகம் காட்டாத சேட்டிங்கை நம்பாதே. பணத்தை கேட்டால் போடாதே..* ஆராய்ந்திரு – ஒருமுறைக்கு பலமுறை செயலியை சரி பார். விமர்சனங்களை படி; பெயர், இ-மெயில் முகவரியை அலசு…* 2 ஆயிரம் போலிகள்உலகளவில் உள்ள காதல் செயலிகளில் உண்மையானவை மிக குறைவே. ஆனால், பிளே ஸ்டோரில் 2 ஆயிரம் போலி செயலிகள் உலா வருகின்றன. பிரபல காதல் செயலிகளின் லோகோ, ஸ்பெல்லிங்கில் இருந்து சிறிய வேறுபாடே இருக்கும். தெரியாமல் டவுன்லோடு செய்தால் ஆபத்து. டிண்டரில் மட்டுமே 1,200 போலிகள் இருக்கிறதாம்.* ரூ.8000 கோடி அம்போகாதல் செயலி மோசடியால் பணத்தை இழப்பவர்களில் அமெரிக்கர்களுக்குதான் முதலிடம். ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடியை இழக்கின்றனர்.இந்தியாவில் டாப் 11இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் காதல் செயலிகள்:பெயர்    துவக்கம்    மொத்த பதிவிறக்கம்     2022 பதிவிறக்கம் (பிப். வரை)டிண்டர்    2016    10 கோடி    15,500 ஹின்ஞ்    2012    10 கோடி    -ஹாப்பன்    2014    10 கோடி    8,000டன்டன்    2014    5 கோடி    -குவாக்குவாக்    2010    5 கோடி    16,000படோ    2006    10 கோடி    2,300கிரின்டர்    2009    1 கோடி    2,950ஹூ    2014    1 கோடி    பம்பிள்    2018    1 கோடி    13,500ஓகேகுபிட்    2004    1 கோடி    -ட்ரூமேட்லி    2016    50 லட்சம்    8,600* 90 சதவீத முகவரிகள் ஆள் இல்லாத டீ கடைகாதல் செயலியில் 90 சதவீதம் போலி முகவரிகள். ‘ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றும் கதைதான்’ நல்ல காதலன், காதலி கிடைக்காமல் கூட போகட்டும். அதை விட, மோசடி பேர்வழிகளிடம் சிக்காமல் தப்பிப்பது பெரும்பாடு. பல விதமான மோசடி, வீழ்த்த துடிக்கின்றன. அவை:கேட்பிஷ்ஷிங்: இணையதளத்தில் பரவி கிடக்கும் அழகி, அழகர்களின் புகைப்படங்களை திருடி, இதுதான் நான் என கூறும் மோசடி.ஸ்கேமர்ஸ்: பணத்தை கறக்க முயற்சிக்கும் மோசடி காதலன், காதலிகள்.பிஷ்ஷிங்: பேசி பேசி கவிழ்த்து, தனிநபர் தகவல்களை திருடும் மோசடி.போலி ஹூக்கப்: நான் கம்பெனி தருகிறேன் என வலைவீசும் போலி ஹூக்கப் செயலிகள்.கிரிப்டோகரன்சி: காதல் பெயரில் கிரிப்டோகரன்சி, முதலீட்டில் சிக்க வைக்கும் மோசடி கும்பல்.பிளாக்மெயில்: தனிப்பட்ட தகவல், பலவீனத்தை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பது.மால்வேர்: மோசடி தளத்துக்குள் இழுத்து, தனிப்பட்ட தகவல், வங்கி கணக்குகளை திருடுவது.வேடதாரிகள்: பிரபல டாக்டர், அதிகாரி, தொழிலதிபர், அரசியல் தலைவர் என கூறி வலை விரிப்பது.* ஓட்டை வாய் சென்னைஆளும் புதுசு… இடமும் புதுசு. டேட்டிங் செயலி ரகசிய நண்பர்கள் பாதுகாப்பானவர்களா? ரகசியம் காக்கப்படுமா? இதில், சென்னை பின் தங்குகிறது. அந்தளவுக்கு ஓட்டை வாயர்கள் அதிகம். சந்தித்து விட்டு வந்த மறுநிமிடமே, ‘டேய் மச்சான்… உங்க ஏரிய பொண்ணு தாண்டா…’ என்று போட்டு கொடுத்து விடுகிறார்களாம். மும்பை, பெங்களூரை போல் வராது என்கிறார்கள் ‘அனுபவித்த‘ அனுபவசாலிகள்.* சிக்கினால் சர்வ நாசம்டேட்டிங் செயலியில் சர்வ ஜாக்கிரதையுடன் நட்பை தேர்ந்தெடுக்காவிட்டால், உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. ஏனெனில், மற்ற செயலிகளை போல், இவற்றிலும் சமூக விரோதிகள் ஊடுருவல்கள் அதிகம். குறிப்பாக, பெண்களை வைத்து வர்த்தகம் செய்பவர்கள், வலை வீசி விட்டு அமர்ந்துள்ளனர். காமத்துக்கு அலைபவர்கள் இந்த வலையில் சிக்கினால் சர்வ நாசம். கேட்கும் போதெல்லாம் கப்பம் கட்ட வேண்டும். இல்லை என்றால், இருட்டு இணைய தளங்களில் ரகசியங்கள் அம்பலமாகும். …

The post கலாசாரத்தை சீரழிக்கும் காதல் செயலிகள்: விஷம் தடவிய இனிப்பு; விட்டில் பூச்சியாய் சிக்கும் பெருசு, சிறுசு; கட்டுபாடற்ற மனதுக்கு படுகுழியே பரிசு appeared first on Dinakaran.

Tags :
× RELATED சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள்...