×

சாய் பல்லவிக்கு பாலிவுட்டில் கடும் எதிர்ப்பு

இந்தியில் ஆமிர் கான் மகன் ஜுனைத் கானுடன் ‘ஏக் தின்’ என்ற படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, இதையடுத்து 2 பாகங்களாக உருவாக்கப்படும் ‘ராமாயணா’ என்ற மிகப் பிரமாண்டமான படத்தில் சீதை வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் அவர் நடித்துள்ள சீதை கதாபாத்திரம் தற்போது வட இந்திய நெட்டிசன்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதோடு, இதுபோன்ற கேரக்டரில் அவர் நடிப்பது ராமாயண காவியத்தை பெரிதும் அவமதிப்பது போல் இருப்பதாக கமென்ட் வெளியிட்டு வருகின்றனர். இதே படத்தில் சூர்ப்பனகையாக நடிக்கும் ரகுல் பிரீத் சிங் உள்பட சில பாலிவுட் நடிகைகளுடன் சாய் பல்லவியை ஒப்பிட்டு, வேண்டுமென்றே பல எதிர்மறை கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும் நடித்திருக்கும் இப்படம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் சோஷியல் மீடியா மற்றும் இணையதளங்களில் வெளியானதை தொடர்ந்து, பாலிவுட் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பின்புலத்தில் யார் இருக்கின்றனர் என்பது பற்றி படக்குழுவினரோ அல்லது சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளோ கவலைப்படாத நிலையில், இதுபோன்ற எதிர்மறை கருத்துகளுக்கு பதில் கருத்து சொல்ல வேண்டாம் என்று, ‘ராமாயணா’ படக்குழு வலியுறுத்தி இருக்கிறது.

எனவே, நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. இப்படத்தின் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது பாகத்துக்கான படப்பிடிப்பை தொடங்க தயாராகி வருகின்றனர். இதுவரை தான் நடித்த படங்களில் காட்டிய அக்கறையை விட, ‘ராமாயணா’ படத்தில் ஏற்றுள்ள சீதை கேரக்டருக்காக கூடுதலான அர்ப்பணிப்பை சாய் பல்லவி வழங்கி வருகிறார்.

Tags : Sai Pallavi ,Bollywood ,Aamir Khan ,Junaid Khan ,Sita ,
× RELATED இன்ஸ்டா பக்கம் முடக்கத்தை நீக்க...