×

பாபி சிம்ஹாவின் 25வது படம் – பூஜையுடன் துவக்கம்!

“தெலுங்கில் ‘‘ ரசாக்கர்’’ , மற்றும் தமிழில் ‘‘ இந்தியன் 2‘‘ படங்களுக்குப் பிறகு பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தின் துவக்கவிழா இன்று (டிசம்பர் 16) நடைபெற்றது. யுவா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா தயாரிப்பில், மெஹர் யாரமாட்டி இயக்கத்தில், பாபி சிம்ஹா மற்றும் ஹெப்பா படேல் நடித்துள்ள புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் தனிகில்லா பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே. கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த் சதாசிவுனி இசையமைப்பாளராகவும், விவேக் அண்ணாமலை கலை இயக்குநராக பணியாற்றுக்கின்றனர்.

இயக்குநர் மெஹர் யாரமாட்டி:
“அனைவருக்கும் வணக்கம். இது இயக்குநராக எனது முதல் படம். உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். எங்கள் முழு குழுவிற்கும் நன்றி.”

சூர்யா ஸ்ரீனிவாஸ்:
“அனைவருக்கும் வணக்கம். பாபி சிம்ஹா அவர்களுடன் முதல் முறையாக வேலை செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஹெப்பா படேல் அவர்களுடன் மீண்டும் நடிப்பது சந்தோஷமாக உள்ளது. எங்கள் முழு குழுவிற்கும் நன்றி. இந்த படம் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும்.”

ஹெப்பா படேல்:
“அனைவருக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு சிறந்த கதைக்களத்துடன் ஒரு படம் கிடைத்துள்ளது. சூர்யாவுடன் இரண்டாவது முறையாக பணியாற்றுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. பாபி சிம்ஹா அவர்களுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் கண்டிப்பாக அனைவரையும் மகிழ்விக்கும்.”

நாயகன் பாபி சிம்ஹா:
“அனைவருக்கும் வணக்கம். ‘வால்டேர் வீரய்யா’ படத்திற்கு பிறகு உங்களை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தெலுங்கில் நாயகனாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று நினைத்தபோது பல கதைகளை கேட்டேன். ஒரு நல்ல கதைக்காக காத்திருந்த நேரத்தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்தார். கதையை கேட்டவுடன் மிகவும் பிடித்தது. இது ஒரு நடிகனாக எனக்கு சவாலான கதை. என் திரைவாழ்க்கையில் இது ஒரு புதிய முயற்சி. இதில் தாத்தா கதாபாத்திரம் உள்ளது. அந்த வேடத்தை பரணி அவர்கள் செய்கிறார் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவருடன் நடிப்பது ஒரு பெரிய சந்தோஷம்.

ஹெப்பா ஒரு சிறந்த நடிகை. அவருடன் பணியாற்றுவதும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் நல்ல குழுவுடன் இந்த படத்தை செய்கிறோம். தயாரிப்பாளர் யுவா மிகவும் ஆர்வமுள்ளவர். இந்த கதை சவாலானதாக இருப்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். டிசம்பர் 22 முதல் விசாகபட்டினத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம்.” எஸ்.கே.என் கிளாப் அடிக்க, வம்சி நந்திபதி கேமராவை ஆன் செய்ய படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

Tags : Bobby Simha ,Yuva Krishna ,Yuva Productions ,Meher Yaramatti ,Heppa Patel ,Thanigilla Bharani ,Surya Srinivas ,
× RELATED இன்ஸ்டா பக்கம் முடக்கத்தை நீக்க...