×

பாபி சிம்ஹா ஜோடி ஆனார் ஹெப்பா படேல்

சென்னை: யுவா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் யுவ கிருஷ்ணா தொலாட்டி தயாரிப்பில், மெஹர் யாரமாட்டி இயக்கத்தில், பாபி சிம்ஹா மற்றும் ஹெப்பா படேல் நாயகன்நாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம் உருவாகிறது. இப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் தனிகில்லா பரணி மற்றும் சூர்யா னிவாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.கிருஷ்ண தாஸ் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த் சதாசிவுனி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். விழாவில் பாபி சிம்ஹா பேசும்போது, ‘‘தெலுங்கில் நாயகனாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று நினைத்தபோது பல கதைகளை கேட்டேன். ஒரு நல்ல படத்துக்காக காத்திருந்த நேரத்தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்தார். ஸ்கிரிப்ட் கேட்டவுடன் மிகவும் பிடித்தது. இது ஒரு நடிகனாக எனக்கு சவாலான கதை’’ என்றார்.

Tags : Bobby Simha ,Heppa Patel ,Chennai ,Meher Yaramatti ,Yuva Productions ,Yuva Krishna ,Tolatti ,Thanigilla Bharani ,Surya Nivas ,G. Krishna Das ,Siddharth Sadasivuni ,
× RELATED பாபி சிம்ஹாவின் 25வது படம் – பூஜையுடன் துவக்கம்!