×

இன்ஸ்டா பக்கம் முடக்கத்தை நீக்க லட்சுமி ராமகிருஷ்ணனிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல்

சென்னை: இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முடக்கத்தை நீக்க ரூ.3 லட்சம் தர வேண்டும் என சிலர் தன்னை மிரட்டுவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் புகார் கூறியுள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அவரிடம் சிலர், 3500 டாலர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் தெரிவித்து இருக்கிறார். தனது இன்ஸ்டா பக்கம் முடக்கப்பட்டதாகவும், அதை மீண்டும் பெற 3500 டாலர்கள் செலுத்த வேண்டும் என மிரட்டுகிறார்கள் என அவர் கூறி இருக்கிறார். அது இந்திய ருபாய் மதிப்பில் 3 லட்சமாகும். லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவை பார்த்த நெட்டிசன்கள், அந்த பணத்தை செலுத்த வேண்டாம், யாரோ ஸ்கேம் செய்கிறார்கள் என அவருக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க லட்சுமி ராமகிருஷ்ணன் முடிவு செய்திருக்கிறாராம்.

Tags : Lakshmi Ramakrishnan ,Chennai ,
× RELATED பாபி சிம்ஹாவின் 25வது படம் – பூஜையுடன் துவக்கம்!