×

வாடிக்கையாளர் நலனில் மாயவரம் பைனான்ஸ்

கடந்த 1947ம் ஆண்டு நிறுவப்பட்ட மாயவரம் பைனான்சியல் சிட் கார்பரேஷன் லிமிடெட் (எம்.எப்.சி), தமிழகத்தில் நம்பகமான நிதி நிறுவனமாக உள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை மற்றும் வெளிப்படை தன்மையுடன் அனைத்து ஒழுங்குமுறை நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது. தற்போது இந்த நிறுவன ஏ.எம்.பி.ஏ குழுமத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த குழுமம் பல்வேறு நிதித்துறை சேவைகளை பாரம்பரியமாக செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களால் சேமிக்க கூடிய தொகையை தேர்ந்தெடுத்து, ஒரு குழுவில் சேரவும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாதாந்திர தவணையை தவறாமல் செலுத் வேண்டும். பணம் செலுத்தும் காலத்தின்போது பிரதி மாதம் பரிசு தொகையினை வெல்வதற்கான ஏலம் நடைபெறும். அதிகபட்ச தள்ளுபடி செய்து ஏலம் கேட்பவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.அனைத்து உறுப்பினர்களும் சேலத்தில் வெற்றி பெறும் வரை ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் ஏலம் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்ற ஒரு வார காலத்திற்குள் பரிசுத்தொகை பட்டுவாடா செய்யப்படுவது. வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து வருமான குழுக்களுக்கும் பரந்த அளவிலான திட்டங்களை வழங்குவதற்கும் இந்த நிறுவனம் சிறந்த முயற்சிகளை மேற்கொள்கிறது. சிறிய குழு 25 மாதங்களுக்கு ரூ.4000ல் தொடங்குகிறது. ஒவ்வொரு மாதமும் தொடங்கும் பல குழுக்கள் உள்ளன. அதிகபட்சமாக ரூ.1 கோடி சீட்டு குழு (அதாவது பிரதி மாத சந்தா ரூ.2 லட்சம் சீட்டின் காலம் 50 மாதங்கள்) நடத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் இந்நிறுவனத்தை பின் தொடரலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் கடமைகளை பற்றி அறிந்திருப்பதை உறுதி செய்யும் உள்அடக்கத்தை இந்நிறுவனம் உருவாக்குகிறது….

The post வாடிக்கையாளர் நலனில் மாயவரம் பைனான்ஸ் appeared first on Dinakaran.

Tags : Mayavaram Finance ,Mayavaram Financial Sit Corporation Limited ,MS ,Tamil Nadu ,Mayawaram Finance ,Dinakaran ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்