×

அருண் விஜய்யின் பாக்ஸரில் ரியல் பாக்ஸர்

விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படம் பாக்ஸர். இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அருண் விஜய் பிரபாசுடன் சாஹு, விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விவேக் இயக்கத்தில் பாக்ஸர் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்நிலையில் இறுதி சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங் பாக்ஸர் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டி.இமான் இசையமைக்க பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

Tags : Arun Vijay ,
× RELATED அருண் விஜய் ஃபிட்னஸால மட்டும் பெரிய ஆளா ஆகல! Vijayakumar Speech At Retta Thala Title Teaser Launch.