×

சாய்பல்லவி கண்ணீர் ; சூர்யா ஆறுதல்

பிரேமம் படம் தொடங்கி மாரி 2ல் ரவுடி பேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்டதுவரை துள்ளல் நடிப்பை வெளிப்படுத்தி வரும் சாய் பல்லவி, என்ஜிகே படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். செல்வராகவன் இயக்குகிறார். பட டிரெய்லர் ரிலீஸுக்கு வந்திருந்த சாய்பல்லவி மனதில் இருந்ததை கொட்டினார். ‘நான் சூர்யா ரசிகை. படப்பிடிப்பில் அவரது உழைப்பை நேரில் பார்த்தேன். எனது படங்களில் நடிக்கும்போது வீட்டிலேயே ஹோம் ஒர்க் செய்து விட்டு தயாராக செல்வேன். என்ஜிகே படத்துக்கு ஹோம் ஒர்க் செய்யாமல் வரச் சொன்னார்கள்.

படப்பிடிப்பின்போது இயக்குனர் செல்வ ராகவன் எதிர்பார்த்த நடிப்பை வெளிப்படுத்த 10 டேக், 20 டேக் அதற்கு மேல் என பல டேக் வாங்கினேன். ஒரு கட்டத்தில் என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கே வந்ததுடன், என்னால்தான் படப் பிடிப்பு தாமதமாகிறது என்று நினைத்தேன்’ என்றார்.
பின்னர் சூர்யா பேசும்போது, ‘இப்படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம். சாய்பல்லவி திறமையான நடிகை. பல டேக் வாங்கியதுபற்றி கூறினார்.

நானும் பல டேக் வாங்கித்தான் சில காட்சிகளை முடித்தேன். சில சமயம் காட்சி முடித்துவிட்டு செல்லும் சாய் பல்லவி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருப்பார். என்னால்தானே இத்தனை டேக் ஆகிறது என்பார். அவரை சமாதானம் செய்து ஆறுதல் கூறினேன். காட்சியில் நன்றாக நடித்த பிறகும், டைரக்டர் ஒகே சொன்னபிறகும் அதில் திருப்தி அடையாமல் சாய்பல்லவி அழுதபோது நடிப்பின் மீதான அவரது டெடிகேஷன் (அர்ப்பணிப்பு) என்னை ஆச்சர்யப்பட வைத்தது’ என்றார்.

Tags :
× RELATED அஞ்சாமை விமர்சனம்