சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் வரை மட்டுமே நடைபெற உள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பேரவை கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, 2022-23ம் ஆண்டுக்கான கூடுதல் வரவு, செலவு திட்டம் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். இந்தி திணிப்பு குறித்து சட்டப்பேரவையில் நாளை விவாதம் எடுத்துக்கொள்ளப்படும். எடப்பாடி பழனிசாமி கடிதம் குறித்து சட்டப்பேரவையில் தான் தெரிவிக்க முடியும், வெளியில் சொல்ல முடியாது. அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் பங்கேற்றார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதா? புறக்கணிப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். …
The post எடப்பாடி பழனிசாமி கடிதம் குறித்து சட்டப்பேரவையில்தான் தெரிவிக்க முடியும், வெளியில் சொல்ல முடியாது: சபாநாயகர் அப்பாவு பேட்டி appeared first on Dinakaran.