×

பி.காம், பிபிஏ, பிசிஏ போன்ற இளங்களை பட்டப்படிப்புகளில் 2ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் கட்டாயம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: Bcom, BBA, BCA போன்ற இளங்களை பட்டப் படிப்புகளில் 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனிமேல் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில்  Bcom, BBA, BCA பாடப்பிரிவுகளுக்கு 2-ம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை.   B.Sc பாடப்பிரிவுகளில் 2ம் ஆம் ஆண்டிலும் தமிழ் பாடம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆனால் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட  மற்ற பல்கலைக்கழகங்களில் இந்த நடைமுறை இல்லை. ஆகையால்  அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நடைமுறையை பின்பற்றக்கூடிய வகையில் இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும் 2ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே இந்த பாடப்பிரிவுகளில் முதலாமாண்டில் தமிழ் பாடத்தேர்வு இருக்கிறது. ஆனால்  2-ம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்தாள் கிடையாது.  ஆகையால்  தற்போது 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் பாடத்தேர்வு  கட்டாயம்  இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  இந்த நடைமுறையானது நடப்பு கல்வியாண்டிலேயே அதாவது அடுத்த செமஸ்டர் தேர்வு எப்போது நடைபெறுகிறதோ அதிலிருந்தே இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் அந்த உத்தரவில்  குறிப்பிடப்பட்டுள்ளது….

The post பி.காம், பிபிஏ, பிசிஏ போன்ற இளங்களை பட்டப்படிப்புகளில் 2ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் கட்டாயம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Higher Education Department ,Chennai ,
× RELATED கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு