×

கடலூரில் எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது: வி.கே.சசிகலா

சென்னை: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலையை சேதப்படுத்தியிருப்பது வெட்கக்கேடான செயல், இது மிகவும் கண்டனத்திற்குரியது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீப காலமாக, தலைவர்களின் திருவுருவ சிலைகள் சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. பொது அமைதியை சீரழிக்கும் இது போன்ற செயல்கள் நடைபெறாத வகையில் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்த இழி செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். …

The post கடலூரில் எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது: வி.கே.சசிகலா appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,VK Sasikala ,CHENNAI ,MGR ,Marudathur ,Thitakkudi ,Thiruvuruva ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு