×

Bcom, BBA, BCA படிப்புகளில் 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனிமேல் தமிழ் மொழி பாடம் கட்டாயம்: உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் அறிவிப்பு

சென்னை: Bcom, BBA, BCA படிப்புகளில் 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனிமேல் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்;  பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் Bcom, BBA, BCA பாடப்பிரிவுகளுக்கு 2-ம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை எனவும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நடைமுறையை பின்பற்றக்கூடிய வகையில் இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம்பெற வேண்டும் என்ற உத்தரவையும் வெளியிட்டுள்ளார்.  ஏற்கெனவே இந்த பாடப்பிரிவுகளில் முதலாமாண்டில் தமிழ் பாடத்தேர்வு இருக்கிறது. 2-ம் ஆண்டில் கிடையாது. தற்போது 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் பாடத்தேர்வு இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த நடைமுறையானது நடப்பு கல்வியாண்டிலேயே அதாவது அடுத்த செமஸ்டர் தேர்வு எப்போது நடைபெறுகிறதோ அதிலிருந்தே இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவேண்டுமென்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் கூறியுள்ளார்….

The post Bcom, BBA, BCA படிப்புகளில் 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனிமேல் தமிழ் மொழி பாடம் கட்டாயம்: உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Karthikeyan ,CHENNAI ,BCA ,Dinakaran ,
× RELATED எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி மும்பை பள்ளி மாணவி சாதனை