×

2022-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவிப்பு

ஸ்வீடன்: 2022-ம்  ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பெரி ஹார்ப்லஸ், கேரோலின் பேர்டோசி, டென்மார்க்கின் மார்டென் மெல்டாலு ஆகிய முவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என தேர்வுக் குழு அறிவித்துள்ளது. உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகின்றது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இதில் அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள், மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.   இந்த நிலையில் 2022-ம்  ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பெரி ஹார்ப்லஸ், கேரோலின் பேர்டோசி, டென்மார்க்கின் மார்டென் மெல்டாலு ஆகிய முவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என தேர்வுக் குழு அறிவித்துள்ளது….

The post 2022-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Selection Committee Sweden ,Selection Committee ,America ,Perry Harpless ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த...