×

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவி மாயம்: தொடர் சம்பவங்களால் இந்தியர்கள் அதிர்ச்சி

ஹூஸ்டன்: அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவி மாயமானார். அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை போலீசார் கோரியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் நிஷிதா கண்டுலா(23). கடந்த மாதம் 30ம் தேதியில் இருந்து இவரை காணவில்லை என சான் பெர்னாடினோ போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். நிஷிதா கண்டுலாவை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தகவல் அளிக்கும்படி சான் பெர்னாடினோ போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் காணாமல் போவது, மர்மமான முறையில் இறப்பது போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

கடந்த மாதம், சிகாகோவில் படித்து வந்த ரூபேஷ் சந்திரகாந்த் சிந்தாகிந்த் என்ற மாணவர் மாயமானார். கடந்த ஏப்ரல் மாதம் தகவல் தொழில்நுட்பதுறையில் பட்டமேற்படிப்பு படித்து வந்த ஐதராபாத்தை சேர்ந்த மாணவர் முகமது அப்துல் அராபத் மாயமானார். பின்னர் கிளீவ்லேண்ட் என்ற இடத்தில் அவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச் மாதம் மிசோரியில் 34 வயது பரதநாட்டிய கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டு கொல்லப்பட்டார். இப்படி இந்திய மாணவர்கள் காணாமல் போவதும், தாக்குதலுக்கு உள்ளாவதும் அடிக்கடி நடப்பது அங்கு உள்ள இந்திய சமூகத்தினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவி மாயம்: தொடர் சம்பவங்களால் இந்தியர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : America ,Houston ,US ,Nishita Khandula ,California State University ,USA ,Chan ,
× RELATED பஞ்சாப் கல்லூரியில் நடந்த மோதலுக்காக...