×

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு

மெக்சிகோ: மெக்சிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நேற்று (ஜூன் 2) அதிபர், 128 செனட் உறுப்பினர்கள் மற்றும் 500 கீழவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் கிளாடியா ஷீன்பாம் போட்டியிட்டார்.

தேர்தலில் 58.3 முதல் 60.7 சதவீத வாக்குகளை கிளாடியா ஷீன்பாம் பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேசிய தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தன்னுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இருவர், தனக்கு வாழ்த்து தெரிவித்ததாக கிளாடியா ஷீன்பாம் கூறினார். தற்போதைய பிரதமர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் வழியில் கிளாடியாவின் ஆட்சிக் காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாடியா ஷீன்பாம் தனது வெற்றி உரையில்:
“நான் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபர் ஆகிறேன். இது எனது வெற்றி மட்டுமல்ல. நம் அனைவருடைய வெற்றியாகும். தாய்மார்களுக்கான வெற்றி. இதன் மூலம் மெக்சிகோ ஜனநாயக நாடு என்பதை நாம் நிரூபித்துள்ளோம் என கூறினார்.

61 வயதான கிளாடியா ஷீன்பாம் வரும் டிசம்பர் மாதம் அதிபராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நகர மேயாரகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

The post மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Claudia Sheinbaum ,Mexico ,
× RELATED மெக்சிகோவில் கடும்...