×

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை வரலட்சுமி

சென்னை,: புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. ‘RIZANA-A Caged Bird’ என்ற இந்த திரைப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படம் பற்றி வரலட்சுமி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “அகாடமி விருது வென்ற ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி.

எனக்கு மிகவும் பிடித்த படம் ‘ஸ்கார் ஃப்ரம் தி லயன் கிங்’. எந்தளவுக்கு பிடிக்கும் என்றால், அந்தப் படத்தின் வசனங்கள் அனைத்தும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அந்த கிங்கிற்கு ஜெர்மி ஐயன்ஸ்தான் குரல் கொடுத்திருப்பார். இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்? அவருடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது எனது கனவு நனவான தருணம். ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமா ரசிகர்களாலும் அவர் மிகவும் மதிக்கப்படும் நடிகர்” என்றார்.

Tags : Varalakshmi ,Hollywood ,Chennai ,Varalakshmi Sarathkumar ,Jeremy Irons ,Chandran Rutnam ,Sri Lanka ,
× RELATED பாபி சிம்ஹாவின் 25வது படம் – பூஜையுடன் துவக்கம்!