×

உதவி பேராசிரியர்களை நிரப்புவதற்கான டிஆர்பி தேர்வு அறிவிப்பு 10 நாளில் வெளிவரும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: உதவி பேராசிரியர்களை நிரப்புவதற்கான, டிஆர்பி தேர்விற்கான அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வரும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களின் பணியை வரைமுறை படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். கடந்த 2012ம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அதிமுக அறிவித்து இருந்தது. ஆனால், அவர்கள் அதை செய்யாத காரணத்தால், கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.பல்கலைக்கழகங்களுக்கு கீழ் செயல்படுகின்ற 41 கல்லூரிகளின் 152 கோடி செலவை அரசே ஏற்கும் என்று முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தற்போது அந்த கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர்களை நிரப்புவதற்கான  டிஆர்பி தேர்விற்கான அறிவிப்பு இன்னும் 10 நாளில் வரும். அதில் 4 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,030 ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் பணி ஆணையை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார். முதல் கட்ட பொறியியல் கலந்தாய்வு முடிந்துள்ளது, இதில் 10,351 பேர் மாணவர்கள் கலந்து கொண்டு உள்ளனர், அதில் 6,009 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். தமிழக முதல்வர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காது, தமிழ்நாட்டிற்கென என ஒரு கல்விக் குழுவை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டின் கல்வித் திட்டம் இருக்கும் அதற்கு எதிராக வேறுபட்ட கருத்து இல்லை. ஆரம்ப கல்வி விஷயத்தில் அதிக கவனம்  செலுத்த வேண்டும் என்பதற்காகவே காலை சிற்றுண்டி  திட்டம் கொண்டுவரப்பட்டது. மூன்றாவது மொழியை ஏற்றுகொள்ள முடியாது என்றுதான் புதிய கல்வி கொள்கையில் கூறி இருக்கிறோம். மூன்றாவது மொழி படிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால் தேர்வு எழுதும்போது மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்பட கூடாது. கல்லூரி மாணவர்களிடம் இது குறித்து கருத்து கேட்டபோது இரண்டு மொழி படிப்பதே சிறப்பாக உள்ளது. இதில் மூன்றாவதாக ஒரு மொழி வேண்டாம் என கூறுகின்றனர். மேலும், 5ம் வகுப்பிற்கு பொது தேர்வு என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்….

The post உதவி பேராசிரியர்களை நிரப்புவதற்கான டிஆர்பி தேர்வு அறிவிப்பு 10 நாளில் வெளிவரும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Bonmudi ,Minister of Higher Education ,Dinakaraan ,
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...