
‘தக் லைஃப்’ படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்னத்திடம், ‘அமைதியான காபி கடையில் ஒரு மணி நேரம் செலவிட வேண்டும். சினிமா பற்றி பேசக்கூடாது. காபி குடித்துக்கொண்டே நீங்களும், கமல் சாரும் என்ன பேசுவீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மணிரத்னம், ‘58 நிமிடங்கள் வரை கமல் சார் பேசுவார். மீதியுள்ள 2 நிமிடங்களில், ‘வெரி குட்’ என்று நான் சொல்வேன். கமல் சார் அறிவியல், வரலாறு என்று எதுபற்றி வேண்டும் என்றாலும் பேசுவார். எனவே, சினிமா பற்றி பேசக்கூடாது என்று சொன்னாலும் பரவாயில்லை.
அவர் பேசிக்கொண்டே இருப்பார், நாம் காபி குடிக்கலாம்’ என்றார். பிறகு அவரிடம், ‘உங்கள் மனைவி சுஹாசினியை ஏன் உங்கள் இயக்கத்தில் நடிக்க வைக்கவில்லை?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதில் சொல்லவில்லை. சுஹாசினி தனது சித்தப்பா கமல்ஹாசனுடன் ஒரு தமிழ் படத்தில் கூட நடித்தது இல்லை. மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ படத்தில் கமல்ஹாசன் மகளாக நடிக்க சுஹாசினியை அணுகினர். ஆனால், அன்று அது நடக்கவில்லை.

